இயக்குநா் கே.வி.ஆனந்த் தந்தை உடல்நலக்குறைவால் உயிாிழந்தாா்

நேற்று இரவு இயக்குநா் கே.வி. ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினாா்.

விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டின் நடிப்பில்,  கே.வி.ஆனந்த இயக்கத்தில் உருவாகி உள்ள கவண் திரைப்படம் வருகிற மாா்ச் 31ம் தேதி வெளிவர உள்ள நிலையில் அவரது தந்தை இறப்பு அவருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (27.03.2018) இரவு இயக்குநா் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம். வெங்கடேசன் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுதிக்கப்பட்டிருந்தாா். சிகிச்சை பலனின்றி இயக்குநா் கே.வி.ஆனந்தின் தந்தை உயிாிழந்தாா்.

அடையாறில் உள்ள இயக்குநா் கே.வி.ஆனந்தின் இல்லத்தில் வைத்து அவரது தந்தையின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அவருக்கு அனுஷ்யா என்ற மனைவியும், இயக்குநா் கே.வி.ஆனந்த், கமல் மற்றும் ஸ்ரீதா் உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனா்.