படப்பிடிப்பு முடிந்தது! சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

rajini karthik subburaj

ரஜினிகாந்த் அரசியல் களத்தில் பயணிக்க தொடங்கிய பிறகு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலில் தொண்டர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை செய்து முடிந்த பின்னர் தான் தீவிரமாக அரசியலில் கால் பதிக்க இருப்பதாக கூறி வரும் அவர் காலா படத்தினை தொடர்ந்து எந்திரம் 2.0 படத்தை முடித்து விட்டார். தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் 2 வாரங்களாக நடந்தது. அதில் ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரன் நடிக்கும் காட்சிகள், மற்றும் சண்டை காட்சிகளை படக் குழுவினர் எடுத்தனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதியில் வார்டனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் பகல் நேரத்தில் விடுதியில் வார்டனாக பணியாற்றுகிறார். பின்னர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளதாம். மேலும் இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி.

karthick subburaj

இந்நிலையில் டேராடூனில் நடந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. எனவே இன்று அல்லது நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். பின்னர் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர்.