பிரபல தெலுங்கு பட இயக்குனர் கொரடலா சிவா குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு டிவிட்.

 

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.  தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பல தமிழ்,தெலுங்கு நடிகர்கள்,இயக்குனர்கள் என தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக முன்பு புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு பட இயக்குனர் கொரடலா சிவா குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு டிவிட் செய்துள்ளார். அதில் நான் தூங்கும் போதும், எழும் போதும் ஒருவரை மட்டும் மறக்க மாட்டேன். அவர் பெயர் கே.எஸ். அவர் தான் காமசூத்திராவின் தலைவர் என  கூறியிருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஶ்ரீரெட்டியின் இந்த டிவிட் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.