உதயநிதியின் தந்தையான விஜய் வில்லன்

உதயநிதிக்கு தந்தையாக பிரபல இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளார்.

உதயநிதி மகேஷிண்டே பரதிகாரம் என்ற மலையாள காமெடி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள திரையுலக முதன்மை நடிகரான ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். தமிழில் பிரியதர்ஷன் இயக்குகிறார்.

உதயநிதிக்கு ஜோடியாக பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தென்காசிப் பகுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.  நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்ற ஆண்டு விஜய்யின் தெறி படத்தில் நடித்த பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்தப் படத்தில் உதயநிதியின் தந்தையாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.