பிரபல இயக்குனரும், ‘தெறி’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான இயக்குனர் மகேந்திரன் இன்று புதுக்கோட்டையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனே அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், மகேந்திரனுக்கு மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.