பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தற்போது ‘உள்ளெ வெளியே 2’ படத்தை இயக்கவுள்ளார். முதல் பாகம் போலவே இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள பார்த்திபன், இந்த படத்திற்காக மூன்று நடிகைகளை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் தனது டுவிட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2. 0. 1. 8-ன் 18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’ 18-ற்கான commercial comedy thriller படத்திற்கு 18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும், 28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும், 38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965