பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள நடிகர் ஆரவ் பற்றி சைத்தான் மற்றும் சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஆரவிடம் காதல் வசப்பட்டிருப்பதாக ஓவியா கூறினார். அவர் விளையாட்டாக கூறினாரோ இல்லை உண்மையிலேயே கூறினாரோ தெரியவில்லை. ஆனால் அதை ஆரவ் ஏற்கவில்லை. அவருடன் நட்பாகவே பழகி வந்தார் ஆரவ். மற்ற யாரும் ஓவியாவிடம் அதிகம் பேசாமல் இருந்த போது, அவருக்கு ஆறுதலாக இருந்தார் ஆரவ்.  இதனால் ஓவியாவிற்கு அவர் மேல் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆரவ், அவரை தவிர்க்கும் வகையிலேயே நடந்து கொள்கிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒரு பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “ சைத்தான் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஆரவ் நடித்திருந்தார். அவரின் உண்மையான பெயர் நபிஸ். ஆரவ் என்ற பெயரை அவரே வைத்துக்கொண்டார். ஓவியாவின் காதலை அவர் ஏற்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவன் மிகவும் புத்திசாலியான பையன்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவனுக்கு தெரியும்.  எல்லை தாண்டி அவன் நடந்து கொள்ள மாட்டான்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.