Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..

ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..

பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.ராஜமௌலி அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது..

பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி-2 விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய ராஜமௌலி, முதலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், அதற்காக தற்போது வெட்கப்படுவதகாவும் தெரிவித்தார்.

முன்னதாக, அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை லட்சுமி மஞ்சுவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், ராணாவிற்கு அம்மாவாக நடிக்க அவர் சம்மதம் தெரிவிக்காததால், அந்த வேடம் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றுள்ளது. அவரும் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

எனவே, தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என ராஜமௌலி கூறியுள்ளார்.