பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் பாலிவுட நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பாகுபலி 2 படம் விரைவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு, ராஜமௌலி தனது கனவு படமான மகாபாரத கதை சினிமாவாக எடுக்கப்போகிறார் எனக் கூறப்பட்டது. மேலும், சிலமாதங்களுக்கு முன்பு மகாபாரத கதை தொடர்பாக ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரை சந்தித்து ராஜமௌலி பேசியதாக செய்திகள் வெளியனது. ஆனால், இதுபற்றி ராஜமௌலி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், அமீர்கானுடன் ராஜமௌலி பேசியது உண்மைதான் எனவும், ஆனால் மகாபாரத கதையை தற்போது இயக்கவில்லை என பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி “ நான் அமீர்கானை சந்தித்து பேசியது உண்மைதான். மகாபாரத கதை பற்றி நாங்கள் விவாதித்தோம். அதில் நடிக்க அமீர்கான் ஆர்வமாய் இருக்கிறார். ஆனால் தற்போது பாகுபலியை தாண்டி வேறு எதையும் என்னால் யோசிக்க முடியாது. கண்டிப்பாக பாகுபலிக்கு பின் மகாபாரதம் படத்தை நான் இயக்கவில்லை. அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்” என அவர் தெரிவித்தார்.