விஜய்-ரசிகர்கள் போட்டோஷூட்டில் மனைவியுடன் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்

இளையதளபதி விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுக்க அவரது தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் நட்சத்திரங்களும் விரும்புவதுண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் சற்று முன்னர் விஜய்யை ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரவிகுமாரின் மனைவியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக விஜய்யுடன் அவரது ரசிகர்கள் இணைந்து எடுக்கும் போட்டோஷூட் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான ரவிகுமார் மனைவியுடன் சென்று புகைப்படம் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.