Tamil Actress Oviya Latest Hot Photoshoot Stills

களவாணி படத்தை இயக்கிய இயக்குநா் சற்குணத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய லோகோவை பிக்பாஸ் புகழ் ஒவியா இன்று ட்விட்டரில் வெளியிட்டார்.

இயக்குநா் சற்குணம் இயக்கிய களவாணி படத்தின் மூலம் தான் அறிமுகமானவா் ஒவியா. அதன்பின் ஒவியா பல படங்களில் நடித்துள்ளார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரகணக்கான ரசிகா்களின் மனத்தில் இடம் பிடித்தார் ஒவியா. தற்போது இயக்குநா் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். விமல் நடிப்பில் வெளிவந்த மஞ்சப்பை படத்தையும், நயன்தாரா நடித்த டோரா படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் தான்.

தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் சற்குணம். இவருடைய முதல் படத்தில் நடித்த ஹீரோயினும், பிக்பாஸ் புகழ் ஒவியாவை வைத்து இன்று காலை 10மணிக்கு ட்விட்டா் வலைத்தளத்தின் மூலம் இந்த லோகோவை வெளியிட்டார்.

இயக்ககுநா் சற்குணம் தற்போது களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். மேலும் மாதவனை வைத்து ஒரு படத்தையும் இயக்கி  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.