இயக்குனர் செந்தில்நாதனை 80களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றிய செந்தில்நாதன், 1988ம் ஆண்டு விஜயகாந்த், ராதிகா நடித்து வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இயக்குனர்.

தொடர்ந்து பெண் புத்தி முன் புத்தி, படிச்சபுள்ள, இளவரசன், நட்சத்திர நாயகன் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

சொந்த படம் எடுக்கும் ஆசையில் சிக்கி கொண்ட செந்தில்நாதன் அதற்காக கடன் பெற்று அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டார். நாயகி என்ற சீரியலில் நடித்து வந்த செந்தில்நாதன் அதில் இருந்தும் விலகி காஞ்சிபுரத்துக்கு சென்று கோவில் வாசலில் பிச்சை எடுத்ததாக அவரே கூறி உள்ளார். தான் தற்கொலை செய்ய இருப்பதாகவும் தங்கள் யாராலும் எனக்கு உதவ முடியாது என தன்னிடம் போனில் பேசிய தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

விடியல்ராஜ் என்ற தயாரிப்பாளர் எவ்வளவோ கெஞ்சியும் தான் இருக்கும் இடத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். தொடர்ந்து போலிசிடம் பேசி தயாரிப்பாளர்கள் தரப்பில் செந்தில்நாதனை கண்டுபிடிக்க காவல்துறையிடம் புகார் சொல்லப்பட்டுள்ளது