ஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்

 

விஷால் நடித்து சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தை, இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
 
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேன், ஆன்ட்ரியா, வினய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பலருக்கும் இந்தப் படம் பிடித்திருக்கிறது. கடந்த 4 நாட்களில், 11 கோடி வசூலித்திருக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், மிஷ்கினின் தனித்துவ ஸ்டைலில், த்ரில்லரும் சேர்ந்து படத்தை ரசிக்க வைக்கிறது. விஷாலின் கேரக்டரும், பர்ஃபாமன்ஸும் நன்றாக உள்ளன. மொத்த டீமுக்கும் சியர்ஸ் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷாலுக்கு வெற்றியைத் தேடித்தந்த படம் இது.