தனுஷை பாராட்டித் தள்ளிய இயக்குனர் ஷங்கர்…

11:06 காலை

ப.பாண்டி படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் தனுஷ் குழுவினரை பாராட்டியுள்ளார்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல முகம் காட்டிய நடிகர் தனுஷ், ப.பாண்டி மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால், அதில் அவர் கதாநாயகனாக நடிக்காமல், ராஜ்கிரணை நடிக்க வைத்தார். ராஜ்கிரணின் சிறு வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தார்.

இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றது. ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளும் இப்படத்தை பற்றி நேர்மறையான விமர்சனங்களை எழுதின. மேலும், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தனுஷின் இயக்கம் பற்றி சிலாகித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், தனுஷ் குழுவினரை பாராட்டியுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள ஷங்கர் “பவர் பாண்டி ஒரு எளிய, அழகான, மனதை தொடக்கூடிய திரைப்படம். தனுஷ் டீமிற்கு எனது வாழ்த்துக்கள். ராஜ்கிரன், ரேவதி, பிரச்சன்னா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்”

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரே பாராட்டியிருப்பது, ப.பாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

(Visited 46 times, 1 visits today)
The following two tabs change content below.
சிவ குமார்

சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544