ஓவியாவிற்காக பாடலை டெடிக்கேட் செய்த இயக்குனர்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது இந்த நிகழ்ச்சி என்பதே உண்மை.

பிக்பாஸில் கலந்துகொண்டவர்களில் அதிக லாபம் அடைந்தவர்கள் யாரெனில் நிச்சயம் அது ஓவியாதான். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கென்று புரட்சிப்படை ஒன்று இணையதளங்களில் செயல்படுகிறது. அவர்களது வேலையே எலிமினேட் லிஸ்டில் ஓவியா இருந்தால் அவருக்கு கூடுதல் வாக்குகள் அளித்து வெற்றி பெற வைப்பதே.

சரி விசயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புடன் வாகுவாதத்தில் ஈடுபட்ட ஓவியா அவரை ஷட்டப் செய்யுங்கள் என்று கூறுவார். அந்த வார்த்தையை கொண்டு ஜெய், அஞ்சலி நடித்துவரும் பலூன் படத்தில் ஒரு பாடல் வருகிறது. இது குறித்து அப்படத்தின் இயக்குனர் சைனிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “there is a promo song in BaLLOON. and its related to shuttup pannunga. deticaated 2 OVIYA” என்று பதிவிட்டுள்ளார்.