இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிவர் சிவா. பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தை குடும்பம் குடும்பாக ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

விவேகம், விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனத்திற்கு மேலும் ஒரு படம் செய்து கொடுப்பதாக அஜித் வாக்குறுதி அளித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. அந்த படத்தையும் சிவாவே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனரா என்பது விரைவில் தெரிய வரும்.

இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் “ விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித், நாம் இணைந்து பணியாற்றிய 4 படங்களில் இதுதான் பெஸ்ட் எனக்கூறினார். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. ஆனால், வாக்குவாதம் ஏற்படும். சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என நான் கூறுவேன். ஆனால், அவரோ நான் நடிப்பேன் என அடம்பிடிப்பார். எனவே, சண்டை இயக்குனரிடம் கூறி அவரிடம் கூறுங்கள் என்பேன். ஒளிப்பதிவாளரிடம் கூறுவேன். அதன்பின் அஜித்திடமே கூறுவேன். ஆனால், அவர் கேட்கவே மாட்டார்” எனக் கூறியுள்ளார்.