அஜித்தை வேற லெவலுக்கு ‘விவேகம்’ கொண்டு செல்லும். இயக்குனர் சிவா

12:50 மணி

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்னை திரும்பிவிட்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் படக்குழுவினர் ரஷ் போட்டு பார்த்ததில் பெரும் திருப்தி அடைந்துள்ளனர்.

இயக்குனர் சிவா ‘விவேகம்’ படம் குறித்து தனது நெருங்கிய வட்டாரங்களில் கூறியபோது, ‘விவேகம்’ படம் அஜித்தை வேற லெவலுக்கு அழைத்து செல்லும் என்றும், அவருடைய நடிப்பும் ஆக்சனும் ஹாலிவுட் நடிகர்களையே ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதுவரை அஜித் நடித்த எந்த படத்தின் சாயலும் ‘விவேகம்’ படத்தில் இருக்காது என்றும் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் செம விருந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393