இளமை ஊஞ்சலாடுகிறது தலைப்பை கைப்பற்றிய சுசீந்திரன்?

இயக்குனர் சுசீந்திரன் தற்போது அறம் செய்து பழகு படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநகரம் படத்தில் நடித்த சந்தீப்,விக்ராந்த் நடிக்கின்றனர். இப்படடத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலைகளில் சுசீந்திரன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கு 1978ம் ஆண்டு ரஜினி,கமல் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான இளமை ஊஞ்சலாடுகிறது படத் தலைப்பை வைக்கப்போவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது