60 வயதில் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட தமிழ் இயக்குனர்

‘நாளைய மனிதன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரான பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன், ‘உருவம்’, ‘அதிசய மனிதன்’,
அசுரன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’, சிவன் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தான் இயக்கிய ‘இது காதல் கதை’ என்ற படத்தில் நாயகியாக நடித்த ஷெர்லி என்பவரை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். வேலுபிரபாகரனுக்கு வயது 60 என்பதும், நடிகை ஷெர்லிக்கு வயது 35 என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த வேலுபிரபாகரன், ஷெர்லி இன்று முதல் இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர். திரையுலகினர்களும், பத்திரிகையாளர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.