வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சயீஷா. வனமகன் படத்தில்  தனக்கு நடிகையாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜய் மீது சயீஷாவிற்கு அலாதியான அன்பு. அவருக்கு ராக்கி கட்டுவதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்தாராம் சயீஷா.

விஜய் தான் என் சினிமா வாழ்க்கையை துவக்கி வைத்துள்ளார் அதற்கு நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் உள்ளது என்று சயீஷா கூறினார். நடிகர் ஜெயம் ரவியை பற்றி கேட்ட போது ‘ ஜெயம் ரவியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, 21 ற்கும் மேற் பட்ட படங்களில் நடித்த ஒரு அனுபவமிக்க நடிகர் இப்படத்தில் பல காட்சிகளில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்த போதும் சற்றும் அதை பெரிய விஷயம் ஆக்காமல் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார்’ என்று அவர் கூறினார். தொடர்ந்து தான் நல்ல கதையுள்ள தமிழ் திரைப்படங்களில் நடிக்க  விரும்புவதாகவும் அவர் கூறினார்.

தன்னுடைய புது விதமான உடைகளை அவ்வளவு கற்பனையுடன் வடிவமைப்பது யார் என்று விசாரித்த போது ‘ என் அம்மா தான் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர். வனமகன் படத்திற்கும் என் அம்மாதான் என்னுடைய  உடைகளை வடிவப்பார் என்று இயக்குனர் விஜயிடம் கூறிபோது அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை, பிறகு அம்மா கொடுத்த டிசைன்களை பார்த்ததும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உடைகளை வடிவமைப்பது அம்மாவின் தொழில் இல்லை, என் பாட்டிக்கு அதில் ஆர்வம் அதிகம் அதனால் என் அம்மாவிற்கு அது ரத்தத்தில் கலந்துள்ளது’ என்று அவர் கூறினார்.

தென்னிந்திய  திரைப்படங்களில்  வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்நடிகை மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துள்ளாதாக தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.