ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

07:53 காலை

தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன் என இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவை வைத்து அமுதன் இயக்கிய படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமா ஹீரோக்களையும், தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Loading...

அதன் பின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை அமுதன் இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும், நடிகர் சிவாவே நடிப்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழ் படத்தின் 2ம் பாகத்தில், ஓவியாவை நடிக்க வைக்க வேண்டும் என பலர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனக்கும் அதில் விருப்பமே. இதுபற்றி அவரிடம் தெரிவிப்பேன். அவர் நடிக்க விரும்பினால் இது நடக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 97 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com