குழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி பேய்

vaibav kaateri movie

யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய இயக்குனர் டீ.கேவின் அடுத்த படைப்பு தான் காட்டேரி. இதுவும் காமெடி பேய் படமாக உருவாகி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி. நாம் அனைவரும் நினைப்பது போல காட்டேரி என்றால் இரத்தை குடிக்கும் பேய் என்று நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது என்னவென்றால் பழைய மனிதர்கள், மூதாதையரக்ள என்ற அர்த்தமும் உண்டு.

காட்டேரி படத்தை ஸ்டூடியோ கிரீன் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இதில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர்,பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

varalakshmi

இந்த படத்தை பற்றி இயக்குனர் டீகே கூறியதாவது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் கதையை பற்றி ஒன் லைனையில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே இந்த படத்திற்கு ஏற்ற தலைப்பாக காட்டேரி என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று தன்னுடைய எண்ணத்தையும் தெரிவித்தார். அந்த தலைப்பு இந்த கதைக்கு ஏற்றாற் போல உள்ளதால் எனக்கும் பிடித்திருந்தது.

kaateri sonam bajva

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை உருவாக்கும் திட்டமிருந்தது. தெலுங்கு மொழி எனக்கு தெரியாத காரணத்தால் தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம். உடனே இந்த படத்திற்கு வைபவ் ஹீரோவாக கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக நான்கு நாயகிகள். சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு கதாநாயகிகள் இருக்கிறார்கள்.

காட்டேரி படத்தில் சோனம் பஜ்வா சுயநலமிக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மன நல
மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். கதையில் இடம்பெறும் 1960ம் ஆண்டு சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் நடிக்கிறார்கள். மேலும் யாமிருக்க பயமேன் என்னுடைய முதல் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் மிகவும் பிரபலமானது. அதை மாதிரி இந்த படத்திலும் செம ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது. காட்டேரி படமானது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு மிக மிக பிடிக்கும்.

குறிப்பாக சொல்லனும்னா இந்த காட்டேரி படம் ரத்தம் குடிக்காத காமெடி பேய் என்று கூறினார்.அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. காட்டேரி குழந்தைகளுக்கு பிடித்த காமெடி பேய்