டுவிட்டரில் அஜித் விஜய் உள்ளிட்ட ரசிகர்கள்தான் பெரும்பாலும் மோதிக்கொள்வது வழக்கம். வெகு சில நேரங்களில் திரையுலகினர்களும் மோதிக்கொள்வது உண்டு

அந்த வகையில் நேற்று பிரபல இயக்குனர்கள் வெங்கட்பிரபு மற்றும் பாண்டிராஜ் தங்களது டுவிட்டர் பக்கங்களில் மோதிக்கொண்டனர்.

சமீபத்தில் நடந்த சிஎஸ்கே வெற்றி குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் “நான் ஒன்றும் சொல்லலப்பா” என்று பதிவு செய்திருந்தார். இதற்கு காட்டமான பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது:

“உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள் நாம் சாப்பிடுவதற்கு, அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்… போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று கருத்து பதிவிட்டு உள்ளார்.

https://twitter.com/pandiraj_dir/status/983935834356264960
https://twitter.com/pandiraj_dir/status/983640263171063813