இயக்குனர் பாலா இயக்கும் நாச்சியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தாரைப்பட்டை படத்திற்கு பின் பாலா இயக்கும் படம் நாச்சியார். இதில் நடிகை ஜோதிகா மற்றும் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோதிகாவின் தம்பியாக ஜி.வி பிரகாஷ் நடிக்கிறார் எனத் தெரிகிறது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

நாச்சியர் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் இது ஜோதிகா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் கதை போல் தெரிகிறது. நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க மறுத்து, இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.