முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதா குமாரியின் சகோதரர் அருண்மொழி வர்மன். இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அப்ரீனா என்ற 17-வது மகள் இருக்கிறாள். இவர் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த 6-ந் தேதி திடீரென அப்ரீணா காணாமல் போயுள்ளார்.

அப்ரீணா காணாமல் போன விஷயம் தெரிந்தவுடன் உடனடியாக அருண்மொழி வர்மன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 5 நாட்களாக போலீசார் பல்வேறுகட்ட விசாரணைகள் நடத்தியும் அப்ரீணா எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. அப்ரீணா படித்துவந்த சர்ச் பார்க் பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

எனவே, தற்போது அவரது குடும்பத்தினர் ஊடகங்களை அணுகியுள்ளனர். இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக நடிகை டிஸ்கோ சாந்தியும், லலிதா குமாரியும் குற்றம்சாட்டுகின்றனர். ஊடகங்கள் மூலம் எங்களது சகோதரரின் மகள் கிடைப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கண்ணீருடன் இருவரும் கூறியுள்ளார்கள். இந்த விஷயம் அறிந்து விரைவில் அப்ரீணா பெற்றோருடன் வந்து சேர்வார் என்று நம்புவோமாக…