‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிகப்பு நிற கார் பரிசளித்துள்ளதுதான் இன்றைய ஹாட் டாக். ஆனால் இந்த பரிசு விநியோகிஸ்தர்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்படி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  வேறு சேனலுக்கு கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.36 கோடிக்கு பிசினஸ் ஆனதாகவும், ஆனால் இந்த படம் ரூ.20 கோடி மட்டுமே வசூலானதால் விநியோகிஸ்தர்களுக்கு ரூ.16 கோடி நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

நஷ்டத்தை மறைக்கவே சூர்யா, இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளதாகவும் இது தங்களை அவமதிக்க்கும் வகையில் இருப்பதாகாவும் விநியோகிஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர்.