தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலாமனவர் நவீன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து, அதை அரக்கோணம் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளார்.

இந்த நிலையில் திவ்யா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நவீன் முதல் திருமணத்தை மறைத்து மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக புகார் அளித்தார். மேலும் முதல் திருமணத்திற்கான ஆதாரங்களையும் போலீஸாரிடம் அளித்தார். இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார், நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து நவீன் கூறுகையில், நான் கைது செய்யப்படவில்லை, திவ்யாவுடன் திருமணம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார். அவர் என்னிடமிருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் தான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.