விஜயகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்!

தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றப் பிரார்த்திக்கிறேன் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி விஜயகாந்துக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. நீண்ட நேரம் ஒழுங்காக பேச முடியவில்லை. பேசினாலும் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாத அளவுக்கு உள்ளது. இந்த அளவுக்கு அவரது உடல் நிலை மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்ற விஜயகாந்த் 45 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பினார். ஆனாலும் அவரது உடல் நிலை பார்ப்பதற்கு மோசமாகத்தான் உள்ளது. இதனால் மீண்டும் விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்வார் என பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர். அதன் பின்னர் தான் பாஜக தலைவர் தமிழிசை விஜயகாந்த் குணமடைய பிராத்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என கூறியுள்ள தேமுதிக தரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.

Recent Posts

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் எலும்பு முறிவு நோயாளிகளை, அரசு எலும்பு முறிவு மருத்துவர் உரிய சிகிச்சை ஏதும் செய்யாமல் நோயை முற்றவிட்டு புரோக்கர்களை… Read More

2 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

தமிழ்நாட்டில்நடைபெறவிருக்கும் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்… Read More

2 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

விக்கிரவாண்டி தொகுதியில் யாருக்கு வாய்ப்பு என்று தொகுதியின் ஒன்றிய செயலாளர்களை கூட்டி தலைமை ஆய்வு நடத்தியபோது மாவட்டப் பொருளாளர் புகழேந்தியும், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரனும் முன்னணியில்… Read More

2 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது அந்த… Read More

3 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் நடிகர்னா அது தளபதி விஜய் தான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் நடிப்பில் உருவாகியிருக்கும்… Read More

3 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரசு மடிக் கணினி வழங்கப்படவில்லை… Read More

3 hours ago