மக்களவைத் தேர்தலில் மிகவும் மோசமானத் தோல்வியை சந்தித்துள்ள கட்சிகளில் தேமுதிகவும் இடம்பிடித்துள்ளது.

2011 -2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தற்போது அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. அதற்கு தேமுதிக வின் சமீபத்தைய அரசியல் செயல்பாடுகளேக் காரணம். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை, தமிழக அரசியலில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது போன்றவையே. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மரணத்திற்குப் பின்னான அரசியல் வெற்றிட சூழ்நிலையை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதற்கிடையில் கமலின் அரசியல் கட்சி, ரஜினியின் அரசியல் வருகை என ஊடகங்களின் கவனமும் மக்களின் கவனமும் தேமுதிக பக்கம் செல்லாமலே இருப்பதற்கு முக்கியக் காரணங்களாகிவிட்டன.

இதையும் படிங்க பாஸ்-  விஜயகாந்தை ராமதாஸ் ஏன் சந்தித்தார்? - கசிந்த தகவல்

அதையடுத்து தேர்தலில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்து தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக நான்கையும் இழந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  திமுகவும் அதிமுகவும் மறைமுகக் கூட்டணி: சொல்வது பாஜக!

ஒருகாலத்தில் கிட்டதட்ட 11 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த தேமுதிக இப்போது தனது மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலக் கட்சியாக இருப்பதற்குத் தேவையான 6 சதவீத வாக்குவங்கி அல்லது 8 சட்டமன்ற உறுப்பினர்  என எல்லா தகுதிகளையும் இழந்துள்ளது தேமுதிக. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் மூன்றாவது பெரியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்த தேமுதிக அந்த தகுதியை இப்போது மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகியக் கட்சிகளுக்கு தாரை வார்த்துள்ளது.