திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினையும் ,உதயநிதியையும் கடுமையாக சாடினார்.

திமுக ஒரு கட்சி அல்ல என்றும் அது ஒரு கம்பெனி போல் செயல்படுகிறது எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் பியூட்டி பார்லர், பிரியாணி கடைகள் போன்றவற்றில் மிக ஒழுங்கீனமாக திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இது போல ஒழுங்கீனங்களை கண்டு அரசு சும்மா இருக்காது நடவடிக்கை எடுத்துதான் தீரும் என்று நேற்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

மேலும் கலைஞர், ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியின் வாரிசு அரசியல் நிலை குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார்.இது போல் குடும்ப அரசியல் அண்ணா திமுகவில் இல்லை என்றும் பேசினார்.