செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி அவரது மகன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு திமுக தரப்பில் இருந்து நேரடியாக எந்த பதிலும் வரவில்லை. ஆனால் தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலியில் இந்த பேரணிக்கு பதில் சொல்லும் விதமாக இரண்டு பேட்டிச்செய்திகள் வந்துள்ளன.

இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட பேரணி இல்லை என்று அழகிரி சொன்னாலும், உண்மையான காரணம் அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. பேரணிக்கு பின்னர் பேசிய அழகிரி என் பின்னால் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறார்கள் முடிந்தால் இவர்களை நீக்கிப்பாருங்கள் என சவால் விட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  பரிதாபமான அழகிரியின் நிலைமை: உண்மை நிலவரம்!

இந்நிலையில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக திமுக தர்ப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து திமுக நாளிதழான முரசொலியின் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் இந்த பேரணிக்கு பதில் சொல்லும் விதமாக இரண்டு பெட்டிச்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  உதயநிதிக்கு இளைஞரணி பதவி - நெருக்கடியில் ஸ்டாலின்

அதில் முதல் பக்கத்தில், வெளிப்பகை… உட்பகை! என்ற தலைப்பில் வெளிப்பகை யுத்த தளவாடங்களோடு வரும். உட்பகை கருப்புச் சந்தைக்காரர்கள், கொள்ளை வியாபாரிகள், பதுக்கல் காரர்கள், அவசர நிலை உணராமல் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் ஐந்தாம் படையினர் ஆகியோர் உருவிலே வரும் என கலைஞர் கருணாநிதி சொன்னதையே எழுதியுள்ளனர். இதன் மூலம் அழகிரியின் பேரணியில் கலந்துகொண்டோர் கழகத்தைக் காட்டிக் கொடுக்கும் ஐந்தாம் படையினர் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  நோட்டாவை விட கம்மியான வாக்குகள் – தினகரன் அப்செட் !

கடைசி பக்கத்தில், அழியக் கூடிய இயக்கமா இது? என்ற தலைப்பில் , ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்திலேயே திமுகவை அழிக்கப் பார்த்தார்கள். அப்போதைய தேர்தலில் திமுக தோற்றதே தவிர அழியவில்லை. அழியக் கூடிய இயக்கமா இது? என கலைஞர் கருணாநிதி சொன்னது எழுதப்பட்டுள்ளது.