திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அவரது கட்சிப்பணிகளை செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கவனித்து வருகிறார்.

முதுமையும், உடல்நலக்குறைவு காரணமாக பேசும் திறனை இழந்த கருணாநிதி தற்போது மெதுவாக மெல்லிய குரலில் அவ்வப்போது பேசுகிறார். ஆனால் அவரது ஞாபக சக்தி என்பது கேள்விக்குறிதான். தான் யார் என்ற ஞாபகத்துடன் தான் கருணாநிதி உள்ளாரா என்பதும் சந்தேகம் தான்.

நேற்று கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுடைய பிறந்த நாளையொட்டி அவரது சிஐடி காலனி வீட்டுக்கு சென்ற கருணாநிதியை மாலை அணிவித்து வரவேற்றார் ராஜாத்தி அம்மாள். பின்னர் கருணாநிதியின் காதருகே சென்ற ராஜாத்தி அம்மாள், இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கேக் வெட்டுங்க என்றார்.

அப்போது கருணாநிதி மெல்ல சிரித்தபடி, எனக்கா? என்று மெதுவாக கேட்டுள்ளார். உடனே சிரித்த ராஜாத்தி அம்மாள், உங்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி பிறந்தநாள். இப்பதானே கொண்டாடினோம். இன்னிக்கு ஜூன் 19 எனக்குப் பிறந்த நாள் என்று கூறியுள்ளார். பின்னர் மெல்ல சிரித்தபடியே கேக்கை வெட்டினார் கருணாநிதி.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட தனத பிறந்தநாளை கூட கருணாநிதி மறந்துள்ள நிலையில் உள்ளது அவரது ஞாபக சக்தி என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.