திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அகில இந்தியத் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய திட்டம் வகுத்து அதனை சிறப்பாக செயல்படுத்திய கனிமொழியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

கலைஞர் புகழஞ்சலிக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், வரவேற்பை பார்த்து வந்திருந்த தலைவர்கள் எல்லோரும் சந்தோசமாம். நிகழ்ச்சிக்கு வரும் தலைவர்களை விமான நிலையத்தில் வரவேற்பது, அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, விழா மேடைக்கு அழைத்து வருவது, மீண்டும் ஹோட்டல், அங்கிருந்து விமானநிலையம் என எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாம்.

யாரை, யார் விழாவுக்கு அழைக்க வேண்டும், அவர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும், விழா மேடையில் போடப்பட்ட சேர்களின் ஆர்டர் என திட்டமிட்டு ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு நபரை இதற்காகவே நியமித்திருக்கிறார்கள். தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கியமானவர்கள்தான் இந்த வேலையைக் கவனித்தார்களாம். இதற்கான திட்டங்களை ஸ்டாலினுக்கு வகுத்துக் கொடுத்தவர் கனிமொழியாம். அனைத்தையுமே கனிமொழிதான் ஏற்பாடு செய்திருக்கிறார்.

விழா முடிந்து தேசிய தலைவர்கள் கிளம்பும் போது எல்லோருமே ஃபெர்பெக்ட் அரேஞ்ச்மெண்ட் என்றுதான் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்கள். இதனையடுத்து ஸ்டாலின் கனிமொழியை அழைத்து ரொம்பவும் நல்லா பண்ணிட்டீங்க, எல்லோரும் பாராட்டினாங்க. அந்தப் பெருமையெல்லாம் உனக்குத்தான் என பாராட்டினாராம்.