சமீப காலமாக திமுக பாஜகவோடு நெருக்கம் காட்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அதன் பின்னர் ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்த அதிமுக, திமுக தலைவர் இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யாதது ஏன்? என்றார்.

இதிலிருந்து திமுக, அதிமுக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரியவருகிறது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். ஆனால் பாஜகவோடு திமுக சமீபகாலமாக நெருங்கி வருகிறது என்றார் தங்கதமிழ்செல்வன்.