திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா சமாதிக்க அருகே அடக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அரசு தரப்பு வைத்த வாதத்துக்கு எதிர் வாதத்தை தற்போது திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்வைத்து வருகிறார்.

அரசு தரப்புக்கு எதிராக பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்து வரும் திமுக வழக்கறிஞர் ஜெயலலிதா விவகாரத்தில் தனது அழுத்தமான வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா இறந்த போது முதல் நாளில் தான் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது.

பதவியில் உள்ள முதல்வருக்கு மெரினாவில் இடம், முன்னாள் முதல்வருக்கு கிண்டியில் தான் இடம் என்ற எந்த சட்டமும் இல்லை. இது திமுக தரப்பின் முக்கிய பாய்ண்டாக பார்க்கப்படுகிறது. மேலும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதை தெளிவாக திமுக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.