திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா சமாதிக்க அருகே அடக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அரசு தரப்பு வைத்த வாதத்துக்கு எதிர் வாதத்தை தற்போது திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்வைத்து வருகிறார்.

அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு அனுமதி மறுக்கிறது. கருணாநிதி மீது மக்கள் வைத்துள்ள உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்வதை மரியாதையாக பார்க்க முடியாது. உரிய மரியாதை உடன் கருணாநிதியை அடக்கம் செய்ய உரிமை உள்ளது.

ராஜாஜி, காமராஜர் போன்ற மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்ய முடியாது என திமுக தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 1988-ஆம் ஆண்டே அண்ணா சமாதி அடக்கம் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதி தான் என் வாழ்வும், ஆன்மாவும் என அண்ணாவே கூறியிருக்கிறார்.

வழக்குகள் தான் இடைஞ்சல் என அரசு கூறியது தற்போது நீங்கிவிட்டது. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட போது தொடரப்பட்ட வழக்கில் தடையில்லை என அரசே கூறியுள்ளது. மேலும் பல அதிரடி வாதங்களை மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்வைத்து வாதாடி வருகிறார்.