கலைஞர் உயிருடன் இருந்தபோது இளைஞரணி தலைவராக இருந்த ஸ்டாலின் , கலைஞரின் வயோதிகம் காரணமாக கட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொருட்டு செயல் தலைவரானார்.

இந்நிலையில் கலைஞரின் மறைவுக்கு பிறகு இவர் தலைவராக வேண்டும் என்று கட்சியில் முடிவு எடுக்கப்பட்டு ஸ்டாலின் தலைவராக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைவராலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்டாலின் திமுக தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், செயல் தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளது.