கேரளாவில் கடும் மழைவெள்ளம், நிலச்சரிவு என வந்து மாநிலமே ஸ்தம்பித்துள்ளது பலர் வீடு வாசல்கள் உறவினர்கள் மற்றும் கால்நடைகளை இழந்து கண்ணீர் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். பல அணைகள் நிரம்பி மக்கள் வெள்ளத்திலும் வேதனையிலும் தவித்து வருகின்றனர்.

பல நடிகர்கள் பல வேண்டுகோள்களை ஆதரவுகளையும் உதவிகளையும் தங்களால் முடிந்த அளவு செய்கின்றனர். நடிகர் துல்கர் சல்மானும் கேரளாவை காக்க உதவுங்கள் என்று டூ பார் கேரளா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.