Home சற்றுமுன் ஸ்ரீ ரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது: இயக்குநர் போர்க்கொடி!

ஸ்ரீ ரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது: இயக்குநர் போர்க்கொடி!

தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழில் ஸ்ரீ ரெட்டியை வைத்து ரெட்டி டைரி என்ற தலைப்பில் திரப்படமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது என பிரபல இயக்குநர் வாராகி கோரிக்கை வைத்துள்ளார்.

தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டை வைத்த கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவை குறிவைத்து பிரபல இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் ஆக்கியோர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதனையடுத்து ஸ்ரீ ரெட்டியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனு ஒன்றை அளித்தார் இயக்குநரும், நடிகருமான வாராகி. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கோரிக்கையை அவர் வைத்துள்ளார். ஸ்ரீ ரெட்டி பாலியல் துன்புறுத்தால்கள் என்று பொய் குற்றச்சாட்டுகளை எழுப்பி ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்களை மிரட்டி பட வாய்ப்பை பெற நினைக்கிறார்.

ஸ்ரீ ரெட்டி போன்றோர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது தமிழ் சினிமாவில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். அவரை போன்ற சமூக விரோத கும்பல்களுக்கு பாரம்பரியமான தமிழ் சினிமாவில் ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். இதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கோரிக்கையாக பார்க்க வேண்டும் என வாராகி கூறியுள்ளார்.