ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜரான டாக்டர் பாலாஜி கூறியதாவது:

ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை; லண்டன், எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பெற்று வந்த தொடக்கத்தில் ஜெயலலிதா இட்லி எல்லாம் சாப்பிடவில்லை; பல நாட்கள் திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவுடன் இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார் என்று மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.