தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் நாக்கை பெண் மருத்துவர் கடித்து துப்பிய சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான அந்த மருத்துவர் உறங்கிக் கொண்டிருந்து போது, பெண் மருத்துவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நுழைந்த ஒரு நோயாளி, அப்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளான். தனது நாக்கை அவரின் வாயில் செலுத்தி முத்தம் கொடுத்து அவரை கற்பழிக்க அவன் கடுமையாக முயற்சி செய்துள்ளான்.

இதையடுத்து, அவனின் நாக்கை அந்த பெண் மருத்துவர் கடித்து பாதி நாக்கை கீழே துப்பினார். இதையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். பெண் மருத்துவர் போலீசாரிடம் தகவல் கொடுக்க அவனை போலீசார் பிடித்தனர். மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை முடிந்த பின் அவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையில் மருத்துவமனைக்குள் அவன் நோயாளி போல் நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.