கோவையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் உடலில் பஞ்சை வைத்து தைத்துள்ளனர் தனியார் மருத்துவர்கள்

கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் புவனேஸ்வரி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்கம் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  குவாட்டருக்கும் ஸ்கூட்டருக்கும் ஓட்டா?- கமல் வேதனை

சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னும் வலி குறையாததால் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது வயிற்றில் காட்டன் போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புவனேஸ்வரி தனது கணவரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார்.