பிரான்ஸ் நாட்டில் வால் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் 9 வயது சிறுவனை, பொது வெளியில் நாய் ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வால் டி ஒய்ஸ்ல் எனும் பகுதியில் தனது தாயுடன் 9 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ரோட்வீலர் வகை நாய் ஒன்று அவனைக் கடிக்க ஆரம்பித்துள்ளது.
இதைப்பார்த்த கூச்சல் போட்டு அதைத் தடுத்த அவனது தாயையும் கடித்துள்ளது.

அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுவனையும், அவனது தாயாரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த நாய் யாருடையது மற்றும் ஏதேனும் நோய் வாய் பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.