கனடாவில் இறந்து போன வளர்ப்பு நாய் ஒன்று ஆவியாக வந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் அந்த நாயை வளர்த்தவர்.

கனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் மிச்செல் க்ரெய்க்டன் என்பவர். 44 வயதான இந்த பெண்மணி ஒயக்லே என்ற கிரேட் டென் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். 8 வயதான அந்த நாய் கடந்த ஏப்ரல் மாதம் இறந்துவிட்டது.

இதனால் பெரும் சோகத்தில் இருந்த மிச்செல் அழுதபடியே பல வாரங்கள் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒருநாள் இரவு அவர் படுத்திருக்கும் அறையின் திரைசீலையில் தனது இறந்து போன நாய் ஒயக்லேயின் உருவம் தெரிந்திருக்கிறது.

தனது நாயின் நிழல் உருவம் தெரிந்ததை மிச்செலால் நம்பவே முடியவில்லை. இதனை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்பதால் அதனை புகைப்படமாக எடுத்துள்ளார். அதன் பின்னர் திரைசீலையை நீக்கிவிட்டு பார்த்தபோது எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் இறந்த தன்னுடைய நாய் தன்னுடைய வீட்டிலேயே இருப்பதால் மிச்செல் தற்போது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.