எல்லோரையும் தெருவில் நிறுத்தி விடுவான் விஷால் – ராதாரவி பேச்சு

08:36 காலை

நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் அணிக்கு வாக்களித்தால் உங்கள் எல்லோரையும் விஷால் தெருவில் நிறுத்தி விடுவார் என நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

Loading...

தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் விஷால் தலையில் ஒரு அணி, கே.ஆர் தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் அணி என மொத்தம் 3 அணிகள் போட்டியிடுகிறது.

ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சரத்குமார் மற்றும் ராதாரவி தரப்பின் ஏராளமான புகார்களை கூறி, அவர்களுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்ற விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அதன் தலைவர் தாணு ஆகியோருக்கு எதிராக களம் இறங்கி, ஒரு அணியை உருவாக்கி போட்டியிடுகிறார். அவர் அணியில் இயக்குனர் மிஷ்கின், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் தயாரிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த அணிக்கு ஆதரவாக பேச வந்த நடிகர் ராதாரவி “ விஷாலை நம்பி போக வேண்டாம். அவனுக்கு வாக்களித்தால் உங்கள் அனைவரையும் தெருவில் நிறுத்திவிடுவான். ராதாகிருஷ்ணன் அணியே வெற்றி அணி. எனவே, சிறு தயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள் வரை இந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் பேசினார்.

(Visited 48 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com