பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பெரியார் சிலை குறித்து பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க செய்துவிட்டது. பாஜகவின் மேலிட அழுத்தம் காரணமாக அவர் அந்த பதிவை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு

கமலின் இந்த டுவீட்டில் எல்லா சிலையும் என்றால் சாமி சிலையும் சேர்த்தா? என்று ஒருசிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு கமல் விரைவில் விளக்கம் அளிபபார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.