சூர்யா ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!

நடிகர் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் வரவிருப்பதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை அன்றைய தினம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் இன்று டுவிட்டரில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த விளம்பரம் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த விளம்பரத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்பதே சூர்யாவின் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் சூர்யாவின் பிறந்த நாள் அன்று அவரது ரசிகர்களுக்கு டபுள் டமாக்க இருப்பது மட்டும் உண்மை என்பது இப்போதைக்கு தெரிந்துள்ளது.