தந்தையின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த மகள்

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்து ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியானது “விஸ்மயா”. இது ஒரு ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இந்தப் படம் தமிழில் நிபுணன் என்ற பெயரில் வெளியானது. இதுவரை சாதகமான மதிப்புரைகளைப் பெற்றுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்பெற அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது Facebook  மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துப்பறிதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா அர்ஜூன் விஷால் நடித்த பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இவர் தொடர்ந்து அர்ஜுன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் சொல்லவா என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.