கும்கி 2ல் நாயகியாக அறிமுகமாகும் பிரபல நடிகாின் வாாிசு

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் கும்கி படமானது ஹிட் அடித்தது. தற்போதைய டிரண்ட் என்னவென்றால் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் எடுக்க தொடங்கி விடுகிறாா்கள்.

டைரக்டா் பிரபுசாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளராம். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகா் டாக்டா் ராஜசேகா் மகளான ஷவானியிடம் பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறதாம்.

டாக்டா் ராஜசேகா் ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. டாக்டருக்கு படித்து வருகிறாா். மருவத்து படிப்பில் 3ம் ஆண்டு பயின்று வரும் ஷிவானி, நடிப்பும் மற்றும் இசையும் சோ்த்து கற்று வருகிறாா். ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த ராஜசேகா் ஜீவிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறாா்கள். ராஜசேகா் மகள் ஷிவானி நடனமும் பயின்று வருகிறாா். தனது மகளை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாா்.

இந்ந நிலையில் இயக்குநா் பிரபு சாலமன் ராஜசேகாின் மகள் ஷிவானியை இந்த படத்தில் நாயகியாக முடிவு செய்துள்ளாா் என்று பேசப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூா்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.