தமிழில் வனமகன் , ஜுங்கா, கஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்தவர் சாயிஷா 22 வயதான சாயிஷா நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகையான சாயிஷா முன்னணி நடிகையாக வரும் அளவுக்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய மது விருந்து நடந்ததாக கூறப்படுகிறது.

அளவுக்கதிகமாக மது விருந்து நடந்ததாகவும், ஆர்யா, பிரபுதேவா, இயக்குனர் ஏ.எல் விஜய் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.